[kanchilug] Fwd: எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் ஜனவரி 21, 2023

  • From: Shrinivasan T <tshrinivasan@xxxxxxxxx>
  • To: VGLUG <vpmglug@xxxxxxxxx>, "puduvailug@xxxxxxxxxxxxx" <puduvailug@xxxxxxxxxxxxx>, kanchilug@xxxxxxxxxxxxx, "ilugcbe@xxxxxxxxxxxxxxxx" <ilugcbe@xxxxxxxxxxxxxxxx>, "ilugc.tamil@xxxxxxxxxxxxx" <ilugc.tamil@xxxxxxxxxxxxx>, "ubuntu-tam@xxxxxxxxxxxxxxxx" <ubuntu-tam@xxxxxxxxxxxxxxxx>, "wikimedia-in-chn@xxxxxxxxxxxxxxxxxxx" <wikimedia-in-chn@xxxxxxxxxxxxxxxxxxx>
  • Date: Sat, 21 Jan 2023 01:59:09 -0500

https://www.kaniyam.com/event/digital-tamil-studies-virtual-symposium-january-21-2023/

எண்ணிமத் தமிழியல் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்காகப் பல்துறை சார்ந்த
ஆய்வாளர்கள், கணினி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய பரந்துபட்ட
திறந்தவெளி எண்ணிம அறிவுசார் துறையாகும்.

ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் உள்ள எண்ணிம தமிழியல் சமூகம் ஜனவரி
21ஆம் தேதி முற்பகல் 6.30 pm IST முதல் 10.30 pm IST எண்ணிமத் தமிழியல்
கருத்தரங்கை நடத்துகிறது.   இந்த இணையவழிக் கருத்தரங்கம் எங்கள் ஆய்வுகள்
மற்றும் சேகரிப்புச் சமூகங்களை ஒன்றிணைத்து, ஆய்வுத் திட்டங்களை ஊக்குவிக்கும்
நோக்குடனும், தமிழ் மொழி சேகரிப்புகள் மற்றும் எண்ணிமத் தமிழியல் ஆய்வின்
பரிமாணங்கள் பற்றி உரையாடும் நோக்குடனும் நடைபெறுகிறது.இந்த இணையவழிக்
கருத்தரங்கத்திற்கான பங்கேற்பு இலவசம். இக்கருத்தரங்கம் தமிழிலிலும்
ஆங்கிலத்திலும் சூம் தளத்தின் வழியாக நடைபெறும்.

நிகழ்வு இணைப்பு –
utoronto.zoom.us/meeting/register/tZYpc-GurDgvGdJIqCtlhsdzUbTpGsLj3nec

*நிகழ்வுகளின் அட்டவணை*

குறிப்பு: எல்லா நேரங்களும் கிழக்கு நேர வலயத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.
நிகழ்வு விளக்கங்கள் கீழே உள்ளன.
நேரம் நிகழ்வுகள்
6.30-7.00 pm IST எண்ணிமத் தமிழியல் குழுவின் வரவேற்புரை மற்றும் நிகழ்வின்
தொழில்நுட்பங்கள் குறித்த குறிப்புகள் (பவானி ராமன் & கிர்ஸ்டா
ஸ்டேபெல்ஃபெல்ட்)
7.00-08:45  pm IST *வளர்ந்து வரும் பொது எண்ணிம வளங்கள்*

எண்ணிமத் தமிழியல் மையத்தை (Digital Tamil Studies Hub) அறிமுகப்படுத்துதல்
(நற்கீரன் இலட்சுமிகாந்தன் & கிர்ஸ்டா ஸ்டேபெல்ஃபெல்ட்)இலங்கை முஸ்லிம்
குறுங்கால ஆவணங்கள் சேகரம் (எம்.ஐ. முகமது சாகிர்)

தமிழ் சோவியத் சேகரம் (சீனிவாசன் டி & லெனின் குருசாமி)

தெற்காசிய கனடிய எண்ணி ஆவணக் காப்பகத்தின் தமிழ் சேகரிப்புகள் (தமிழினி
யோதிலிங்கம்)
08.45- 09:.00 pm IST இடைவேளை
09:00- 09.45 pm IST *எண்ணிமத் தமிழ் ஆய்வுகளின் ஆராய்ச்சி எல்லைகள்*

எங்களின் ஆய்வாளர்கள் தங்களுடைய தற்போதைய ஆய்வுப் பணியை முன்வைத்துக்
கருத்துரைகளை வழங்குவார்கள், தங்களின் கேள்விகளை முன்வைத்து, துறையின்
எதிர்காலம் குறித்து விவாதிக்கலாம்.

• சித்தார்த் ஸ்ரீதர், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகம்

• மார்கு பலம்போர்த், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகம்

• சண்முகப்பிரியா, ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபுரோ வளாகம்
09.45- 10.30 pm IST *பயிலரங்கம்:*கியூ.ஜிஸ் (QGIS) மென்பொருள் உதவியுடன்
வரலாற்றியல்/எதிர் விவரணையாக்கம் (Mapping) செய்தல்.



*திட்டமிட்ட கருத்துரைகள்*

*எண்ணிமத் **தமிழியல்** மையத்தை (Digital Tamil Studies Hub)
அறிமுகப்படுத்துதல்*

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ வளாக நூலக எண்ணிமத் தமிழியல் மையம், அறிஞர்கள்
மற்றும் சமூகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமிழ்மொழி சேகரிப்புகள் மற்றும்
ஆராய்ச்சிப் பணிகளுக்கான இருமொழி இடைமுகத்தை வழங்குகிறது. சேகரிப்புகள்,
என்னென்ன இருக்கின்றன, எவ்வாறு இவற்றுக்குப் பங்களிப்பது என்பது பற்றியது
இக்கருத்துரை.

*இலங்கை முஸ்லிம் குறுங்கால ஆவணங்கள் சேகரம்*

கிழக்கு இலங்கையின் முஸ்லிம் சமூகங்களில் உள்ள மஹல்லாக்களில்
விநியோகிக்கப்பட்ட குறுங்கால ஆவணங்களைப் பாதுகாத்து, இணைய வெளியில்
அணுகக்கூடிய தரவுகளாக இலங்கை குறுங்கால ஆவணங்கள் சேகரம்உள்ளது. இத்தொகுப்பில்
கொண்டாட்டம்/அனுதாபக் கவிதைகள், பொது அறிவிப்புகள், செய்திகள், கடிதங்கள்,
விளம்பரங்கள், அரசியல்/தேர்தல் அறிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சுய விவரக்
கடிதங்கள் ஆகியன அடங்கும். இந்தத் தொகுப்புகளின் உள்ளடக்கம் பன்முகத்தன்மை
கொண்டது. மேலும், இவை வரலாறு, சமூகவியல், இலக்கியம் மற்றும் அரசியல் உட்பட
பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது, இதனால் ஒப்பீட்டளவில் விரிவான,
பிரதிநிதித்துவ, கூட்டு சமூக நினைவுகள் மற்றும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின்
வரலாறுகளை இத்தொகுப்புப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, தமிழ் முஸ்லீம்களின்
வளமான மற்றும் நீண்ட எழுத்து மரபுகள், அவர்களின் பல்வேறு பிராந்தியப்
பேச்சுவழக்குகள், எழுத்துமுறை பயன்பாடு மற்றும் நடைமுறைகளின் மொழியியல்
தொடர்ச்சிகளுக்கு இந்த ஆவணங்கள் புது வெளிச்சத்தைப் பாய்ச்ச முடியும்.

*தமிழ் சோவியத் **சேகரம்*

தமிழ் சோவியத் சேகரம் என்பது சோவியத் பதிப்பகங்களான ராதுகா பதிப்பகம் மற்றும்
முன்னேற்றப் பதிப்பகம் போன்ற பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட
படைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வெளியீடுகள் பெரும்பாலும் தமிழில் பல
வகைமைகளின் முன்னோடிகளாக இருந்தன, இதில் குழந்தைகளுக்கான சித்திரக்
(விளக்கப்படக்) கதைகள், அறிவியல் எழுத்துக்கள் மற்றும் ரஷ்ய-தமிழ்
மொழிபெயர்ப்புகள் ஆகியன அடங்கும். ஒரு காலத்தில் இப்பதிப்புகள் அனைத்துமே
பரவலாகக் கிடைக்கப் பெற்று வாசிக்கப்பட்டன, இப்போது அப்பதிப்புகளைக்
கண்டுபிடிப்பதே கடினம். இந்த நிலையில் எண்ணிம முறையில் மேற்குறிப்பிட்ட
படைப்புகளைப் பாதுகாத்து அவற்றை,
திறந்த முறையில் அணுகும் சூழலை அனைவருக்கும் உருவாக்குவதைத் தமிழ் சோவியத்
தொகுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தொகுப்புப் பொதுமக்களுக்கும், அறிவியல்
தமிழ் மற்றும் சோவியத்/ரஷ்ய தமிழ் ஆய்வுகளில் ஆர்வமுள்ள
அறிஞர்கள்/கல்வியாளர்கள் அனைவருக்கும் பயன்படும்.

*தெற்காசிய கனடிய* *ஆவணகத்தின்** (SACDA)** தமிழ் சேகரிப்புகள்*

தெற்காசிய கனடிய எண்ணிமக் காப்பகம் (SACDA), ஃப்ரேசர்வாலி
பல்கலைக்கழகத்தில் (University of the Fraser Valley) உள்ள தெற்காசிய ஆய்வு
நிறுவனத்தின் முன் முயற்சியாகும். இது கனடாவில் உள்ள தெற்காசிய
புலம்பெயர்ந்தோரின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ஒரு கனடிய
எண்ணிமக் காப்பகமாகும். தெற்காசிய கனடிய புலம்பெயர் மக்களால் உருவாக்கப்பட்ட
அல்லது அம்மக்களுடன் தொடர்புடைய பாரம்பரியப் பொருட்களை எண்ணிமமயமாக்க
இக்காப்பகம் விழைகிறது. அத்துடன் அவற்றை விவரிக்க மற்றும் திறந்த அணுக்கத்தில்
வழங்கக்கூடிய வகையில் நினைவக நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடன்
இணைந்து தெற்காசிய கனடிய எண்ணிமக் காப்பகம் (SACDA) உருவாக்கப் பட்டுள்ளது.
இக்காப்பகம், விரிவான அளவில் சமூகங்களை ஈடுபடச் செய்து அவற்றின், சமூக மற்றும்
காண்பிய வரலாறுகள், வாய்மொழிப் பண்பாடுகள் மற்றும் உள்ளார்ந்த அறிவு
ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், தெற்காசிய கனடிய ஆவணகம் (SACDA)
தற்போதுள்ள அறிவுசார் உள்கட்டமைப்புகளை மாற்றி அமைக்கவும் அறிவின்
பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை வளர்க்கவும் முயல்கிறது. இந்த
கருத்துரையானது எண்ணிமத் தமிழாய்வுச் சமூகத்தின் வளர்ச்சியில் உள்ள இலக்குகள்
மற்றும் சேகரிப்புகளை அறிமுகப்படுத்தும்.

*பயிலரங்கம்: கியூ.ஜிஸ் (QGIS) மென்பொருள் **உதவியுடன் வரலாற்றியல்/எதிர்
விவரணையாக்கம்** (**Mapping) **செய்தல்**. *

வரலாற்றியல் மற்றும் எதிர்- விவரணையாக்கம் (Mapping) என்பது எண்ணிமத் தமிழ்
ஆய்வுகளுக்குப் பயன்மிக்க கருவிகள் ஆகும். *கியூ.ஜிஸ் *(QGIS) மென்பொருள்
குறித்த நேர்முகப் பயிற்சியை இந்தப் பயிலரங்கம் வழங்கும். புவியியலை மையமாகக்
கொண்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது
பயனுள்ளதாக அமையும். *கியூ.ஜிஸ்* மென்பொருளில் புவியியல் தரவுகளை பதிவிறக்கம்
செய்தல், திருத்துதல், பதிவேற்றம் செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்
உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை இந்தப் பயிலரங்கம் பயிற்றுவிக்கும். அனைத்துப்
பின்னணியில் இருந்தும் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இப் பயிலரங்கில்
பங்கேற்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். மேலும், புவியியல் தகவலமைப்பு (GIS)
குறித்த எந்த முன்னறிவும் பங்கேற்பாளர்களுக்கு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
பயிலரங்கத்தின்பயிற்றுமொழி தமிழ் ஆகும்.

-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com


-- 
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

Other related posts:

  • » [kanchilug] Fwd: எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் ஜனவரி 21, 2023 - Shrinivasan T