[kanchilug] Re: ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்

  • From: Thyagarajan தியாகராஜன் <citizenofgnu@xxxxxxxxx>
  • To: kanchilug@xxxxxxxxxxxxx
  • Date: Sun, 25 Jul 2010 22:54:38 +0530

வணக்கம்,

>>நாம் ரெயில் பிரயாணம் செய்து இருப்போம், ரெயில்கள் செல்ல இருப்பு பாதை போட்டு
இருப்பதை பார்த்து இருப்போம்,இந்த இருப்பு பாதைகள் ஜல்லி கற்கள் மேல்
போடபட்டுயிருக்கும் .இந்த உண்மையின் பின்னால் ஒரு உவமை புனைந்து சில விடயங்களை
அறிய முற்படுவோம் . தாங்கள் செய்யும் ரூபி ஆன் ரெயில்ஸ்யில் நிரல், ஒரு ரெயில்
வண்டியை போன்றது , உங்கள் நிரல் ஒழுங்காய் ஓட இருப்பு பாதையாய் இருப்பது வலை தல
ஆதார மென்பொருள் (வெப் சர்வர் - web server stack), இது தான் நமது டேவிட்
ஹனிமேயர் ஹன்சன் எழுதிய ரெயில்ஸ் சட்டகம் (rails framework). இது இருப்பு
பாதைக்கு இணையாக நான் ஒப்பிடுகிறேன் . மேலும் ரெயில்ஸ் என்னும் சட்டகம் பல சிறு
சிறு மென் மாரலிகளின் உதவி கொண்டு வேலை செய்கிறது. இந்த சிறு சிறு மாரலியை
நாம் ஜெம் என்று அழைக்கிறோம் . இந்த ஜெம்மை (மரகத கற்கள்) நான் ரெயில் பாதையில்
இருக்கும் ஜல்லி கற்களுக்கு உவமை பாராட்டுகிறேன். ஆக நீங்கள் செய்யும் நிரல்கள்
, ரெயில்ஸ் என்னும் இருப்பு பாதையில் ஜெம் என்னும் மரகத கற்களின் மேல்
ஓடுகிறது.

மேலும் தகவலுக்கு : http://coachfactory.blogspot.com/2010/07/blog-post.html

நன்றியுடன்

தியாகு..

பின் குறிப்பு : இக்குழுவிற்கு  தமிழில் மின் அஞ்சல் அனுப்பலாமா?.. கூடாது
என்றால் இனிமேல்  ஆங்கிலத்தில்  அனுப்புகிறேன் ..
Note: If this list expects me to send mail in english, I  will adhere it
from my next post.In that case apologies in advance.

Other related posts: